குமார் வாழ்க
மறக்கமுடியாத மனிதர்கள்!
மதுரைச் சலவையாளர் குமார் வாழ்க!
இப்போது வயது 95
1945-- 1995
வீடு: மதுரை கிருட்டிணாபாளையம் முதல் தெரு.
குமார்! சலவையாளர் ஐம்பதாண்டு சேவை!
குமாரை ஜமீன்தார் வருகவென்பார் அப்பா!
அமைந்தார் நெடுநாளாய் தொய்வற்ற தொண்டு!
பணிவான பண்புதான் சொத்து.
தந்தையோ வெண்ணிற ஆடை அணிபவர்!
கஞ்சிபோட்டு நன்றாய் உலர்த்தி காயவைத்து
வெண்ணிற ஆடை பளிச்சென்று தேய்த்துவந்து
தந்திடுவார்! ஆடை மடிப்புகள் கத்திபோல்
நின்றிருக்கும் காட்சி அழகு.
வீடு:மதுரை கிருட்டிணாபாளையம் முதல் தெரு.
இந்தத் தெருவில் சலவையாளர் வீடுகள்
தொன்றுதொட்டு உள்ள பகுதியாகும்! சுற்றுப் பகுதிகளில் வாழ்வோரின் இல்லத்தை
அக்கறையாய்த் தேடிவந்து தோளில் துணிசுமந்து
பற்றுடன் கொண்டுசென்று வைகையில் ஓடத்தில்
வற்றாத நீரில் துவைத்துப் பிழிந்தேதான்
வெய்யிலில் காயவைத்துக் கொண்டுவந்து தேய்த்திடுவார்!
தொய்வின்றி நேர்த்தியாக வைத்தடுக்கிக் கொண்டுவந்தே
இல்லத்தில் தந்திடுவார் காண்.
மாதக் கணக்குவைத்து சம்பளம்போல் வாங்குவார்!
வீட்டிலே சொந்தமாக மக்கள் துவைப்பவர்கள்
நாட்டில் குறைவுதான்! வீட்டுவேலை மிச்சந்தான்!
வீட்டுக்கு வீடிது தான்.
வீட்டுக்குறி( BARCODE)
அந்தந்த வீட்டுக்கு ஏதோ குறிபோட்டு
அந்தத் துணிகளை எல்லாம் பிரித்தடுக்கி
எந்தக் குழப்பமும் இன்றிக் கொடுத்திடுவார்!
தன்னிக ரில்லாத் திறன்.
கழுதைகள்!
கழுதைகள் வீட்டருகே அங்கங்கே நிற்கும்!
கழுதை முதுகில் துணிமூட்டை ஏற்ற
மெதுவாக வைகையாறு நோக்கி் நகரும்!
பொழுதெல்லாம் ஆறுதான் மாலையில் மீண்டும்
கழுதைகள் மூட்டையுடன் வீடுநோக்கி வந்தே
சரியாக நிற்கும் கணைத்து.
தற்போது இந்த முறையெல்லாம் மாறியது!
இப்போது தேய்க்கும் முறைதான் பெரும்பாலும்!
மக்களும் மாறிவிட்டார் சூழ்நிலைக் கேற்பவே!
அக்காலம் தந்த நினைவு.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home