நம்பிக்கை
ID 4775896897
PW 20032998
நம்பிக்கை!
ஆழ்மனத்தின் ஆற்றல் கணேசன் தலைமையில்
பாவலர்கள் நம்பிக்கை என்ற தலைப்பிலே
ஆவலுடன் பாடுகின்றோம்! உங்களை வாழ்த்துகின்றோம்!
நாவலரை வாழ்த்துவோம் நாம்.
ஊரடங்கு வீட்டங்கு என்றே கொரோனாவின்
வீரியம் தாக்காமல் பாதுகாப்பாய் வாழ்வதற்கு
மாநில மத்திய ஆட்சிகள் தந்தார் விதிகளை!
மாந்தரும் ஏற்றார் மதித்து.
இப்பக்கம் அப்பக்கம் எப்பக்கம் எப்படி
இக்கொரோனா நம்மைத்தான் தாக்க வருமென்றே
சொற்படி கேட்டு நடந்தாலும் நம்பிக்கை
ஒற்றைச்சொல் ஆறுதலே வேர்.
அடிப்படைத் தேவை கிடைக்காத மக்கள்!
பணிக்கள வாழ்விழந்து வாடுகின்ற மக்கள்!
அணியணியாய் வேறுபட்ட கோலத்தில்
மக்கள்!
அனைத்தையும் தாங்குகின்றார் இங்கு.
இப்படித்தான் இந்தக் கொரோனா வெறித்தனம்!
எப்படியும் மீள்வோம் நிலைமாறும் என்றேதான்
நம்பிக்கை யோடு நகர்த்துகின்றார் வாழ்க்கையை!
நம்பிக்கையே நாளும் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
15.04.20
PW 20032998
நம்பிக்கை!
ஆழ்மனத்தின் ஆற்றல் கணேசன் தலைமையில்
பாவலர்கள் நம்பிக்கை என்ற தலைப்பிலே
ஆவலுடன் பாடுகின்றோம்! உங்களை வாழ்த்துகின்றோம்!
நாவலரை வாழ்த்துவோம் நாம்.
ஊரடங்கு வீட்டங்கு என்றே கொரோனாவின்
வீரியம் தாக்காமல் பாதுகாப்பாய் வாழ்வதற்கு
மாநில மத்திய ஆட்சிகள் தந்தார் விதிகளை!
மாந்தரும் ஏற்றார் மதித்து.
இப்பக்கம் அப்பக்கம் எப்பக்கம் எப்படி
இக்கொரோனா நம்மைத்தான் தாக்க வருமென்றே
சொற்படி கேட்டு நடந்தாலும் நம்பிக்கை
ஒற்றைச்சொல் ஆறுதலே வேர்.
அடிப்படைத் தேவை கிடைக்காத மக்கள்!
பணிக்கள வாழ்விழந்து வாடுகின்ற மக்கள்!
அணியணியாய் வேறுபட்ட கோலத்தில்
மக்கள்!
அனைத்தையும் தாங்குகின்றார் இங்கு.
இப்படித்தான் இந்தக் கொரோனா வெறித்தனம்!
எப்படியும் மீள்வோம் நிலைமாறும் என்றேதான்
நம்பிக்கை யோடு நகர்த்துகின்றார் வாழ்க்கையை!
நம்பிக்கையே நாளும் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
15.04.20
0 Comments:
Post a Comment
<< Home