சித்தியுடன் முதல் தொடர்வண்டிப் பயணம் தேனிக்கு!
ஆண்டு 1962
எட்டாம் வகுப்பு படித்தபோது சாவித்திரி
சித்தி வருகைதந்தார்! தேனி வருகிறாயா?
சித்திதான் கேட்டார்! சரியென்றேன்! அப்பாவும்
சம்மதித்தார்! ஆகா! வெளியூர்ப் பயணந்தான்!
இன்று தொடர்வண்டி ஏறும்
முதல்பயணந்தான்!
சென்றோம் பயணத்தில் சித்தியும் நானுந்தான்!
சின்னக் குழந்தைபோல் உற்சாகம் உள்ளத்தில்!
சன்னல் வழியாய் இயற்கையின் காட்சியைக்
கண்டு ரசித்தேன்! மகிழ்ந்தேன் சிலிர்த்திருந்தேன்!
இந்தப் பயணத் தொடர்வண்டி தேனிக்குச்
சித்தியுடன் சென்றதை நான்மறக்கக் கூடுமோ?
சித்தியின் அன்பினை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home