Monday, April 13, 2020

பிறந்தால் மகிழ்வு; இறந்தால் துயரம்!

பிறப்பைத் தந்து மகிழடா என்றே
காய்களை உருட்டியவன்
படிப்படி யாகப் பருவ வளர்ச்சியில்
மகிழ்ச்சியைத் தூவியவன்
படித்து முடித்துப் பணிக்களம் சென்றதும்
உவகையை வீசியவன்
எதிலுமே வெற்றி எங்குமே வெற்றி
என்றே நிமிர்த்தியவன்
இல்லறம் தந்தான் இல்லாள் வந்தாள்
இன்பத்தைத் தூவியவன்
மழலைப் பிஞ்சின் மழலை மொழியில்
களிப்பை உணர்த்தியவன்
சோதனைக் காலம் சாதனைக் காலம்
வேகமாய் நகர்த்தியவன்
இளமை முடிந்தே முதுமைக் களத்தில்
வாழ்வைச் சுமத்தியவன்
சுமந்தது போதும் சுவைத்தது போதும்
புறப்படச் சொல்லிவிட்டான்!
இறப்பின் அழைப்பில் தனிமைப் பயணம்
உறவுகள்  துயரத்தில்
இறந்தவர் எண்ணி இருப்பவர் துயரப்
பிடியில் தவிக்கவிட்டான்!

மதுரை பாபாராஜ்
13.04.20



0 Comments:

Post a Comment

<< Home