Sunday, April 12, 2020

இரவிக்குலம் டெய்லர்ஸ்

இரவிக்குலம் டெய்லர்ஸ் காரைக்குடி!

எண்ணத்தில் நிற்கும் இரவிக்குலம் அவர்களுக்கு வாழ்த்து!

அழகப்பா கல்லூரியில் நான்படித்த ஆண்டு 1967--70

காரைக் குடியிலே கல்கட்டி சுற்றித்தான்
காலத்தைக் காட்டும் மணிக்கூண்டு கொப்புடை
நாயகியின் கோயிலுண்டு! கோயில்  மணிக்கூண்டு
ஏந்தும் இடைவெளியில் அன்று ரவிக்குலம்
ஆண்டிருந்த தையலகம் மாடியில் வைத்திருந்தார்!
தாசுடன் தம்பாவும் நானும் நடந்துசெல்வோம்!
காரைக் குடியிலே தைக்காதோர் இல்லையென்பேன்!
வாடிக்கை யாளர் திருப்தியே சொத்தாகும்!
காரைக் குடிதம்பா தந்தை ரவிக்குலம்
நாடியே செல்வோரை புன்னகை யோடுதான்
பேசி வரவேற்பார்! ஐம்பதாண்டு முன்நிகழ்வு!
மாசற்ற உள்ளம் உழைப்பென்றே வாழ்ந்தவர்!
பாசமுடன் நட்புடன் நாளும் கவர்ந்தவர்!
நேசமுடன் உள்ளத்தால் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home