Friday, April 10, 2020

எங்களைக் காப்பது யார்?

சொந்தநாட்டின் அகதிகள்!

சொந்தநாட்டில் நம்மை அகதிகளாய் மாற்றிவிட்டார்!
இங்குமங்கும் நம்மை அலைக்கழித்துப் பார்க்கின்றார்!
அங்கங்கே மாடிவீடு கட்டிடங்கள் நம்முழைப்பால்!
அங்கங்கே உற்பத்தி செய்தே பொருள்குவித்தோம்!
எந்தப் பொருள்களும் சொந்தமில்லை! கைநீட்டிச்
சம்பளம் வாங்கித்தான் வாழவேண்டும்!
வேலைக்கு
வந்தால் பணம்கிடைக்கும்! இல்லையேல்
ஒன்றுமில்லை!
இன்றிங்கே ஊரடங்கு! சொந்தஊர்  செல்லவேண்டும்!
எங்கும் பணிமனைகள் மூடியாச்சு! வேலையில்லை!
எங்களிடம் காசில்லை! எங்கள் குடும்பங்கள்
எங்களை நம்பித்தான் ஊரில் இருக்கின்றார்!
எங்குதான் போவது? எப்படிப் போவது?
சொந்தநாட்டில் நாங்கள் அகதிகளாய்
மாறிவிட்டோம்!
கண்திறப்பார் யாரிங்கே? கைகொடுப்பார் யாரிங்கே?
வண்டிகள் ஓடவில்லை! எல்லாம்  முடங்கியது!
பன்னூறு மைல்கள்  நடக்கவேண்டும் போகிறோம்!
எங்களைக் காப்பது யார்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home