Friday, April 10, 2020

பொதிகை தொலைக்காட்சி

கவிதை பாடு குயிலே!

16.02.2007

நேரடி ஒளிபரப்பு!

இந்த நிகழ்ச்சியில் தந்தனர் வாய்ப்பினை!
சென்றேன் கவிதைகள் தந்தேன்! நேயர்கள்
என்னிடம் பேசிக் கலந்துரை யாடினர்!
அங்கே ஒருவர் மதுரைபத்ம நாபனாவார்!
என்கவிதை நூல்கள் பெயர்சொல்லச் சொன்னதும்
சொன்னேன்! அவர்தான் என்னுடைய சித்தப்பா!
இந்த நிகழ்வை மறக்க முடியவில்லை!
என்னைத் தொலைப்பேசி தன்னில் அழைப்பதே
அன்பாய் '"கவிஞர் இருக்காரா?" என்றுதான்!
இன்றில்லை என்றாலும் சித்தப்பா என்வாழ்வில்
என்றும் என்நினைவில் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home