Thursday, April 09, 2020

எங்கள் திருமணம்

29.05.1975

வைதீகமுறையில் நடந்த திருமணம்:

ஜோதிகுமார்-- ராஜபாக்கியம்

மாமா வெங்கடேசன் திலகம் அத்தை
நடத்திய திருமணம்:

பாபாராஜ் -- வசந்தா

மேமாதம் இருபத்து ஒன்பதாம் நாளிலே
மாமதுரை தன்னில் குஜராத் சமாஜத்தில்
மேடை இரண்டமைத்தார் ஒன்றில் தங்கையின்
மன்றல் விழாநடக்க மற்றொன்றில் என்விழா!
என்மனைவி அண்ணனோ என்தங்கை கைப்பற்ற
அண்ணனின் தங்கையை நானேற்றேன் முன்வந்து!
அன்றே கொடுத்து எடுத்தோம் மகிழ்ந்துதான்!
கண்கொள்ளாக் காட்சி அது.

தங்கை கழுத்திலே தாலியைக் கட்டியதும்
என்னை அறியாமல் கண்ணீர் தெறித்துவிழ
சொந்தப்  பிரிவின்  நெகிழ்ச்சியா? நான்றியேன்!
கண்ணீரே பிரிவுத் துயர்.

தங்கைக்கு வைதீக வாழ்க்கைத் திருமணம்!
என்முறையில் மாமாவும் அத்தையும் தாலிதர
எங்கள் திருமணம் ஏற்றோம் நடைமுறையில்!
நண்பர்கள்  டீக்காராம் சித்தப்பா வாழ்த்தரங்கம் ,
பத்மநாபன் சித்தப்பா முத்துவீரன் பாவாவின்
முன்னிலையில் பெற்றோர்கள்
வாழ்த்த திருமணங்கள்
அங்கே நடந்தன பார்.

தஞ்சையில் தங்கை குடும்பமும் மாமதுரை
வண்டமிழ் மாநகரில் நாங்களும் வாழலானோம்!
என்னென்ன மாற்றங்கள் இன்றுவரை இல்லறத்தில்!
இந்தச் சுழற்சியே வாழ்வு.

குழந்தைகள் எல்லாம் வளர்ந்தேதான் வாழ்வின்
களத்தில் பணிக்களம் கண்டே வயதில்
உழைத்தே திருமணம் செய்துகொண்டு நாளும்
வளர்கின்ற  தங்கள் குடும்பத்தைப் பார்க்கும்
நிலைக்குதான்  வந்துவிட்டார்  இங்கே! மகிழ்ச்சி!
மலைக்கின்றோம் நாங்கள்தான் பார்த்து.

நாற்பத்தைந் தாண்டு மணவாழ்வைக் கண்டுவிட்டோம்!
ஏற்பட்ட சோதனைகள் சாதனைகள் கண்டேதான்
தோற்றாலும், வெற்றி எனினும் சமநிலையில்
வாழ்க்கையைத் தேர்போல நகர்த்தியே வந்துவிட்டோம்!
காட்சிப் பொருளாய் முதுமையில் வாழ்கிறோம்!
போற்றுகின்றார் சூழ்ந்தேதான் பார்.

மதுரை பாபாராஜ்






0 Comments:

Post a Comment

<< Home