Wednesday, April 08, 2020

மோகன் வினோ கீர்த்தனா கிருத்திக் குடும்பம்

வினோ தனியாளாய் வீட்டின் பொருள்கள்
அனைத்தையும் வாங்கி குழந்தைகள் தேவை
கணவரின் தேவை உணர்ந்து சமைத்து
மனையறத்தில்  வாழ்கிறார் இங்கு.

மாமியாரின் தேவையை நேரத்திற் கேற்றவண்ணம்
தானியங்கி பார்க்கும் மருமகளாய் ஆகிவிட்டார்!
ஆனமட்டும் மோகன் கடமையைத் தாய்மகிழ
தானே நிறைவேற்றிப் பார்க்கின்றார் நாள்தோறும்!
ஆசிகள் நிச்சயம் உண்டு.

மோகன் பணிக்களமும் வீட்டிலே ஆனதால்
மோகன் தனிமை அறையிலே பார்க்கின்றார்!
வீட்டில் இருந்தாலும் இன்றோ தனித்தனி
வாழ்க்கைதான் வீடுதோறும் பார்.

மதுரை பாபாராஜ்






0 Comments:

Post a Comment

<< Home