Friday, April 10, 2020

கிணற்றுத் தவளை! கடல்தவளை!

ஆற்றல்முன் உலகமோ மடுதான்!

கிணற்றுக்குள் வந்தே கடல்தவளை சேர
கிணற்றுத் தவளையோ எங்கிருந்து வந்தாய்?
எனக்கேள்வி கேட்க கடல்தவளை வாழும்
கடற்பரப்பை சொல்லியே இந்த இடத்தில்
குறுகிய எண்ணந்தான்  ஆளுமென்று கூற
கிணற்றுத் தவளை கடல்வீட்டைப் பார்க்க
மனமுவந்தே சென்றது! ஆழியைப் பார்த்து
கிணற்றுத் தவளை நடுங்கியது செல்ல!
கடல்தவளை நின்று உலகம் பெரிது கிணறே உலகமென்று வாழாதே! நண்பா!
மனதை அறிவை அகலப் படுத்து!
அனைத்தையும் சந்திக்கும் ஆற்றலை மேற்கொள்,!
மலைக்காதே உன்னாற்றல் முன்னே உலகம்
மடுதான் உணர்ந்தே எழுந்திடு நீயே!
கொடுத்தது ஊக்கத்தைத் தான்!

மதுரை பாபாராஜ்
10.4.20

0 Comments:

Post a Comment

<< Home