Friday, April 10, 2020

மதுரை நினைவு

மறக்க முடியாத மதுரை நண்பர்கள் குழு!

50 ஆண்டுகால நட்பு!

தசரதன்- முத்து-- சந்திரன்-- பிச்சால்--
அழகர்-- அழகர்-- பாண்டி-- எத்திராஜ்
PRC ராம்ராஜ்-- முருகன்-- நாராயணசாமி
சுப்புராம்--ஜோசப்--LIC ராமச்சந்திரன்


மோதிலால் வீதி பகுதியில் சந்தித்தோம்!
ஈடில்லா நட்பின் இணையராய் சந்திரன்
கூடவே வந்து அளவளாவும் இன்பமே இன்பந்தான்!
மாடுகள் வாழ்கின்ற கொட்டமே நாங்களன்று
கூடும் இடமாகும்! பத்துபேர் நாள்தோறும்
கூடி உரையாடி நட்பில் திளைத்திருந்தோம்!
ஓடியது காலம்  விரைந்து.

ஆரப்பா ளையம் குறுக்குவீதி பொன்னிகடை
ஆர்வமுடன் சென்றேதான் தேநீர் அருந்தினோம்!
ஈர்த்திருந்த நாள்களை எண்ணினால் இன்பந்தான்!
ஆளுக் கொருதுறை  என்றே பணிக்களங்கள்!
கூடுவோம் பேசுவோம்  பார்.

அழகரண்ணன் சைக்கிள் கடையில் அரட்டை
அரசியல் மற்றும் பலகளங்கள் பற்றி
அலசிப்
பிரிவோம் மனமின்றி! மீண்டும் மறுநாள்
வருவோம் அரட்டைக்குத் தான்.

பத்துபேர் பத்துமாத பந்தம் திரைப்படம்
அக்கறையாயச் சென்றோம்! திரண்டிருந்த கூட்டத்தால்
காவல் துறையோ அடிக்கத் தொடங்கியது!
ஆவலுடன் சென்றுவிட்டோம் கல்பனா கூடத்துள்!
ஆர்வத்தின் கோளாறே இஃது.

இல்லறம் கண்டோம்! குடும்பக் கடமையில்
எல்லாமே ஒன்றியதால் காலவெள்ளப் போக்கிலே
செல்கின்றோம்! சென்னையில் நாங்களும்  மற்றவர்கள்
எல்லாம் மதுரையிலும்
வாழ்கின்றோம் அங்கங்கே!
இவ்வுலகில் வாழும் குடும்பத்தார் போற்றவே
இன்றும் தொடர்கிறது நட்பு!

அய்ம்பதாண்டு கண்டும் தொய்வின்றி நட்பினை
உள்ளத்தால் எண்ணிப் பழகுகின்றோம்!
நாள்தோறும்!
எள்ளளவும் எங்களுக்குள் வேற்றுமையே
அண்டவில்லை!
உள்ளங்கள் ஒன்றியது பார்.

நட்புக் குழுவிலே முத்துக் கிருஷ்ணனென்றால்
அத்தனை பேரும் மதிக்கின்ற நண்பராவார்!
எந்தெந்த  வேலையை எப்படிச் செய்யவேண்டும்
கச்சிதமாய் செய்கின்ற ஆற்றல் நிறைந்தவர்!
நட்பின் நளினமே முத்து.

என்றும் நட்புடன்
மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home