Saturday, April 11, 2020

தங்கை சந்திரிகாவின் நினைவில்

தங்கை சந்திரிகாவின் நினைவாக!

12.04.2020

சித்திரை மாதத்தில் கள்ளழகர் வைகையாற்றில்
வந்திறங்கும் காட்சி திருவிழாக் கோலந்தான்!
இந்த நிகழ்வின் முதல்நாள் எதிர்சேவை!
முந்திமுந்தி சென்றுதான் எந்தத் திருக்கணையில்
வந்திருப்பார் என்றே நடந்துசென்று பார்த்திடுவோம்,!
என்னகூட்டம் அக்கூட்ட மோ?

சொக்கிகுளம் டீக்காராம் சித்தப்பா சித்தியை
அக்கறையாய் வீட்டிற்குச் சென்றேதான் பார்த்திடுவோம்!
சித்தப்பா சித்தி குடும்பத்தார் எல்லோரும்
மட்டற்ற இன்பமுடன் பேசி மகிழ்ந்திருந்தோம்!
சுற்றம் கடமைக் கடலிலே மூழ்கியதால்
எத்தனை மாற்றங்கள் இங்கு.

பாபு குடும்பமும் மல்லிகா சுற்றமும்
கூடலில் வாழ்வமைக்க சந்திரிகா வாழ்க்கையோ
நாடுபோற்றும் பக்திப் பழனியில் ஊன்றியது!
தூதுவிட்ட வாழ்க்கையில் இன்பமும் துன்பமும்
கூடுகட்டிப் பார்த்திருக்க தன்சிறகைச்
சந்திரிகா
கூடுவிட்டே இன்று பறந்துவிட்டார் அய்யகோ!
வாடுகிறேன் இங்கே நினைந்து.

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home