Sunday, April 12, 2020

இயற்கையும் இயல்பை மீறும்!

இயல்பு நிலையில் இயற்கை இருந்தாலும்
இயற்கையான காற்றின் மூலமாகத் தானே
பலவகை நோய்கள் பரவுகின்ற சூழல்
உலவுதலை நாம்மறக்க லாமோ?

இயற்கை சுனாமியை உண்டாக்கி வாழ்வை
கலக்கிய கோர நடனத்தைக் கண்டோம்!
உலுக்கிய பூகம்ப காட்சிகளைக் கண்டால்
விழுங்கிய மக்களை மீட்டெடுத்தல் என்று?
பருவமழை  பொய்த்து வறட்சிப் பிடியில்
அரைத்து பசிபஞ்சம் மக்களை வாட்டி
நிலைகுலைய வைக்கிறதே அவ்வப் போது!
இயற்கை அமைதியாகப் பார்த்தால் அழகு!
இயற்கை அமைதி இழந்தால் அழிவு!
இயற்கையும் மாறும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home