Saturday, April 11, 2020


ஒவ்வொருவர் வாழ்விலும் முதுமை/ தள்ளாமை இயல்பு!

எப்படியோ வாழ்கின்றோம் எங்கெங்கோ வாழ்கின்றோம்
எப்படி வாழ்க்கை உருள்கிறதோ அப்படிச்  செல்கின்றோம்!
சுற்றி முடியும் சுழற்சிகள் நின்றதும்
அப்படியே ஓரிடத்தில் காலம்  நிலைநிறுத்த
இப்படியும் அப்படியும் நாள்கள் பறக்கிறது!
உட்கார சொந்தவீடு! சொந்தங்கள் யாருமில்லை!
எத்தனைபேர் வந்துபோன வீடிது? இன்றேனோ
அத்தனையும் போய் தனிமை வெறுமையில்
அக்குடிலில் இங்குமங்கும் நானே அலைகின்றேன்!
எப்படியோ சாப்பாடு யாரோ தருகின்றார்!
எக்கணமும் கூட்டைத் துறக்கத் தயாராக!
எக்கணம் எங்கிருந்து யாரழைப்பார் என்னைத்தான்?
எப்பொழுது வந்தாலும் வா!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home