காரைக்குடி -- சென்னை
காரைக்குடி மாமாLIC ராமச்சந்திரன் -- அத்தை மாலதி - சித்தி சாவித்திரி( எ) சாயா வீட்டில் படித்தேன்! 1967--70
மகன்கள்: தேவதாஸ்-- விலோச்சனன்
மகள்: உமா மகேசுவரி
நாங்கள் மதுரையில்! மாமா குடும்பமோ
காரைக் குடியிலே! பட்டப் படிப்பிற்கு
வாய்ப்பு மதுரையிலும் காரைக் குடியிலும்!
மாமாவோ காரைக் குடிக்கே வரச்சொன்னார்!
நானுமங்கே பெற்றோர் அனுமதிக்கச் சென்றுவிட்டேன்!
மூன்றாண்டு நல்ல அனுபவங்கள் நான்கற்றேன்!
தேனகத்தில் அன்பே துணை.
சித்தியின் அத்தையின் அன்பிலே நாள்தோறும்
திக்குமுக் காடினேன்! தாசுடன் வில்லியும்
அக்கறை கொண்டே பழகிய பண்பினை
எப்படி நான்மறப்பேன்? மாமாவின் மாசற்ற
நட்புடன் கண்டிப்பும் என்னைச் செதுக்கியது!
கற்றேன்நான் வாழ்வியல் தான்.
சித்தி தன்னுடைய வாழ்வை மகன்களை
அக்கறையாய்த் தான்வளர்க்க அர்ப்பணித்தார் நாள்தோறும்!
அத்தையும் சித்தியும் தாய்க்கவலை இல்லாமல்
பற்றுடன் பிள்ளைகளைக் காத்தார் கவனித்து.
அத்தை மகளாம் உமாவும் வளர்ந்திருந்தாள்!
எத்தனை ஆக்கபூர்வ மாற்றங்கள் வாழ்விலே!
முத்தான மாற்றங்கள் தான்.
படிப்பு முடிந்ததும் வாழ்க்கைப் பயணம்
படிப்படியாய் மாறிட வெவ்வேறு திக்கில்
அடியெடுத்து வைத்தேதான் வாழ்ந்திருந்தோம் நாங்கள்!
நதிப்பயணம் மேற்கொண்டோம் பார்.
மாமாவோ ஆயுள்காப் பீடு நிறுவனத்தில்
மேலாள ராகப் பணிசெய்தார்! பம்பரமாய்
நாளும் சுழன்றே பணிபுரிந்தார்! உண்மையாக!
சேர்ந்த துவக்கம் முகவராக! அன்றிங்கே
வாழ்ந்தது மேலாள ராக உயர்ந்தேதான்!
ஆசைப் படாத மனங்கொண்டே தங்கைகள்
வாழ வழிவகுத்தார் பாசமிகு அண்ணனாக!
தோல்வியும் வெற்றியும் வாழ்வு.
அத்தையோ ஆய்வுக் கழகப் பணிக்களத்தில்!
முத்தாய் உழைத்தே பணிநிறைவு பெற்றேதான்
மாமா குடும்பத்தார் சென்னைக் குடியேற்றம்!
காலம் நகர்த்தியது காய்.
மாமா! சரிசமமாய்ப் பழகுவதில் நண்பரானார்!
கோபத்தின் கோலத்தில் பார்த்ததில்லை வாழ்ந்தமட்டும்!
சூழலுக் கேற்ப அனுசரிக்கும் பண்பாளர்!
ஈவிரக்கப் பண்பே அவர்.
மதுரை பாபாராஜ்
மகன்கள்: தேவதாஸ்-- விலோச்சனன்
மகள்: உமா மகேசுவரி
நாங்கள் மதுரையில்! மாமா குடும்பமோ
காரைக் குடியிலே! பட்டப் படிப்பிற்கு
வாய்ப்பு மதுரையிலும் காரைக் குடியிலும்!
மாமாவோ காரைக் குடிக்கே வரச்சொன்னார்!
நானுமங்கே பெற்றோர் அனுமதிக்கச் சென்றுவிட்டேன்!
மூன்றாண்டு நல்ல அனுபவங்கள் நான்கற்றேன்!
தேனகத்தில் அன்பே துணை.
சித்தியின் அத்தையின் அன்பிலே நாள்தோறும்
திக்குமுக் காடினேன்! தாசுடன் வில்லியும்
அக்கறை கொண்டே பழகிய பண்பினை
எப்படி நான்மறப்பேன்? மாமாவின் மாசற்ற
நட்புடன் கண்டிப்பும் என்னைச் செதுக்கியது!
கற்றேன்நான் வாழ்வியல் தான்.
சித்தி தன்னுடைய வாழ்வை மகன்களை
அக்கறையாய்த் தான்வளர்க்க அர்ப்பணித்தார் நாள்தோறும்!
அத்தையும் சித்தியும் தாய்க்கவலை இல்லாமல்
பற்றுடன் பிள்ளைகளைக் காத்தார் கவனித்து.
அத்தை மகளாம் உமாவும் வளர்ந்திருந்தாள்!
எத்தனை ஆக்கபூர்வ மாற்றங்கள் வாழ்விலே!
முத்தான மாற்றங்கள் தான்.
படிப்பு முடிந்ததும் வாழ்க்கைப் பயணம்
படிப்படியாய் மாறிட வெவ்வேறு திக்கில்
அடியெடுத்து வைத்தேதான் வாழ்ந்திருந்தோம் நாங்கள்!
நதிப்பயணம் மேற்கொண்டோம் பார்.
மாமாவோ ஆயுள்காப் பீடு நிறுவனத்தில்
மேலாள ராகப் பணிசெய்தார்! பம்பரமாய்
நாளும் சுழன்றே பணிபுரிந்தார்! உண்மையாக!
சேர்ந்த துவக்கம் முகவராக! அன்றிங்கே
வாழ்ந்தது மேலாள ராக உயர்ந்தேதான்!
ஆசைப் படாத மனங்கொண்டே தங்கைகள்
வாழ வழிவகுத்தார் பாசமிகு அண்ணனாக!
தோல்வியும் வெற்றியும் வாழ்வு.
அத்தையோ ஆய்வுக் கழகப் பணிக்களத்தில்!
முத்தாய் உழைத்தே பணிநிறைவு பெற்றேதான்
மாமா குடும்பத்தார் சென்னைக் குடியேற்றம்!
காலம் நகர்த்தியது காய்.
மாமா! சரிசமமாய்ப் பழகுவதில் நண்பரானார்!
கோபத்தின் கோலத்தில் பார்த்ததில்லை வாழ்ந்தமட்டும்!
சூழலுக் கேற்ப அனுசரிக்கும் பண்பாளர்!
ஈவிரக்கப் பண்பே அவர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home