Tuesday, April 14, 2020

பாவா

பட்டப்படிப்பு--கல்லூரியில் என்னைச் சேர்த்தவர் பாவா முத்துவீரன்!

1967

அழகப்பா கல்லூரி காரைக் குடியில்
அழைப்புதான் வந்தது சேர்வதற்கு! மாமா
அறிமுகத்தால் என்னை அழைத்தனர்! அந்தக்
குறித்தநாள் மாமா வெளியூர்ப் பயணம்!
உடன்வந்தார் பாவா! முதல்வர் அழைத்தார்!
அகத்தால் எடைபோட்டு பையனுக்கு மாமா?
விடைகேட்டார்! பாவாவும் மாமாநான் என்றார்!
தடையில்லை சேருங்கள் என்றார்! மகிழ்ந்தோம்!
அழகப்பா கல்லூரி சேர்த்தவர் பாவா!
அகத்தில் நினைத்தேன் மகிழ்ந்து.

முதல்கவிதை ஐஆர்எட்டு மாலைமுரசில் வெளிவர உதவியவர் பாவா முத்துவீரன்!

1970/71

அருணாசலா திரையரங்கின் எதிரில் இருந்த கடை!
மாலைமுரசில் பார்த்தவர்கள்:
தம்பா-- தாஸ்-- பாபா

மாலை முரசில் மலரை வெளியிட்டார்!
பாவா என்னைக்  கவிதை தரச்சொன்னார்!
நானன்று ஐயாரெட்டு நெல்குறித்து  தந்துவிட்டேன்!
காரைக் குடியிலே நானிருந்தேன் தம்பாவும்
தாசுடன் நானும் கடைவீதி சென்றேதான்
மாலை முரசிலே பார்த்தோம் அந்தவாரம்
ஏனோ மலரில்லை! ஏமாந்தே வந்துவிட்டோம்!
நாங்கள் மறுவாரம் சென்றோம் மலரிலே
பார்த்தோம் எனது கவிதையை! என்னுள்ளம்
ஆர்த்தெழுந்த ஆழி அலைபோல் மகிழ்ந்தது!
பாவாதான் எந்தன் முதல்கவிதை நாளிதழில்
காண வழிவகுத்தார்! எத்தனை நன்றிசொல்ல?
ஊக்கமளித்த பாவா கவிதை வளர்ச்சிக்கு
ஆக்கம் கொடுத்தவ ராம்.

மதுரை பாபாராஜ்

கவிதையின் முதல் படியைத் தொட்டநேரத்தில் நானும் உடன் இருந்தது மகிழ்ச்சி.
முதல் படியிலிருந்து படிப்படியாக 'வள்ளுவர் வாக்கு' வரை வளர்ந்த வளர்ச்சி கண்டு மனப்பூர்வமான வாழ்த்துகள்

தம்பா



0 Comments:

Post a Comment

<< Home