Wednesday, April 15, 2020

நிலமென்னும் நல்லாள் நகும்!

விடியலத்தான் உசுப்பிவிட்டு எங்க போறீங்க? அப்பா! எங்க போறீங்க?

நம்மளோட நெலத்துலநான்
உழுகப் போறேண்டா!  மகனே
உழுகப் போறேண்டா!

உச்சி வெயில் ஏறினாலும்
உழுது நிக்கிற
அப்பா உழுது நிக்கிற!
இதனால நமக்கு என்ன! சொல்ல முடியுமா?
அப்பா சொல்ல முடியுமா?

உன்ன வளத்து படிக்க வக்க
காசு வேணுமே
மகனே காசு வேணுமே

அப்பத்தான் நீபடிச்ச புள்ளயாவ
 மகனே!
புள்ளயாவடா!

நல்லாத்தான் படிச்சுவாடா
நாலெழுத்த கத்து வாடா
நாலுபேரு மதிக்கணும்
நாடே உன்னை வாழ்த்தணும்

வெளிநாடு போகணும்
நெறயத்தான் சம்பாதிச்சு
நிறைவாத்தான் வாழணும்
புரிஞ்சுக்க மகனேநீ!

நான்படிச்சு முடித்துவிட்டு
நான்கற்ற அறிவவச்சு
வெவசாயம் உன்னைப்போல
செஞ்சேதான் வாழப்போறேன்
அப்பா நான்வாழப்போறேன்!

நம்மகிட்ட நெலமிருக்கு
அதவிட்டு வேறவேலை
செய்யறதும் ஒண்ணுதான்
சோம்பேறியும்  ஒண்ணுதான்!

நெலத்தநம்பி உழச்சாக்கா
நெலம்நம்ம காப்பாத்தும்
சோம்பேறி ஆனாக்கா
நெலமே  பாத்து சிரிக்குமுனு
வள்ளுவரு குறளில்தான்
எழுதிவச்ச கருத்தப்பா!
எழுதிவச்ச கருத்தப்பா!

இப்படித்தான் எல்லோரும்
உன்னப்போல மாறிட்டா
வெவசாயம் நெலச்சுநிக்கும்
நாடுந்தான் நிமிந்துநிக்கும்!

மனம்போல வாழ்வுண்ணு
பெரியவங்க சொன்னாங்க
எம்பேர காப்பாத்தும்
நீதானே நல்லமகன்
நீதானே நல்லமகன்!

மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home