Friday, April 17, 2020

மறக்கமுடியாத மனிதர்கள்!

எனது முதல் சென்னைப் பயணம்
அநுமந்து மாமாவுடன்!

1966

யசோதா அத்தை-- ஜானகிராம் சித்தப்பா- சித்தி  வீடு!
அன்பு பொழிந்த குடும்பத்தார்!

மதுரைக்கல் லூரி புகுமுகக் கல்வி
முடித்தேன் மதிப்பெண் சான்றில் பிழைகள்!
திருத்தங்கள் செய்வதோ சென்னையில் என்றார்!
பெருநகரில் பல்கலைக் கூடத்தில் என்றார்!
விரும்பிப் புறப்பட்டேன் நான்.

அநுமந்து மாமா தொடர்வண்டி தன்னில்
எனையழைத்துச் சென்றார்கள் சென்னைக்கு வந்தோம்!
சைதாப்பேட் டையிலே அத்தை யசோதா
அவர்களைப் பார்ப்பதற்கு வீட்டிற்குச் சென்றோம்!
அவர்தான் எனக்குத் துணைபுரிய வேண்டும்!
அவர்வீட்டில் தங்கினேன் நான்.

அத்தையோ பல்கலைக் கூடம் அறிந்தவராம்!
உற்ற அலுவலரைச் சந்தித்துச் சொன்னார்கள்!
அந்த அலுவலரும் சான்றுப் பிழைகளை
அன்பாய்த் திருத்திக் கொடுத்தார் விரைந்து!
வந்தவேலை அத்தையால் அங்கே முடிந்தது!
அன்பில் நெகிழ்ந்தேன் நினைந்து.

கோடைப் பருவகாலம் என்பதால் வெய்யிலின்
தாக்கம் அதிகம் இருந்ததால் அத்தையோ
வாங்கிக் கொடுத்தார் குளிராடி நானணிய!
வாங்கினேன் வாழ்வில் முதலாடி அன்பளிப்பாய்!
நாங்களோ அத்தையின் தம்பியாம் ஜானகிராம்
வீடுநோக்கிச் சென்றோம் விழைந்து.

திருவல்லிக் கேணி திரையரங்குப் பக்கம்
இருந்தது வீடுதான்! அன்புடன் பேசி
உறவின் தொடக்கமுதல் தந்தையுடன் அன்று
சிறகடித்த நாளை நினைவுகூர்ந்து பேச
உறவின் நெகிழ்வை உணர்ந்தேன்நான் அங்கு!
சிலநாள்கள் தங்கினேன்! மாலையில் என்னைக்
கடற்கரையைக் காட்ட அழைத்தேதான்  செல்வார்!
மகன்சத்யா மாலையில் வந்தார்! அன்பாய்
அகங்குளிரப் பேசினார்! சித்தியுடன் பாட்டி
பழகினார் அன்புடன் ! தங்கிய காலம்
மறக்க முடியாது! மீண்டும் மதுரை
தொடர்வண்டி மாமா துணையுடன் வந்தேன்!
கனவுகள் கண்ட உணர்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home