Friday, April 17, 2020

[4/18, 7:46 AM] Madurai Babaraj:

அறத்துப்பால் அதிகாரங்கள் கவிதையில்

அறத்துப்பால்
---------------------------------------------
அதிகாரத் தலைப்புகள்
---------------------------------------------
கடவுளை வாழ்த்தி வான்சிறப்பை
படித்தே நீத்தார் பெருமை
நினைத்தே அறன்வலி யுறுத்து!
இல்வாழ்க்கை என்றும் சிறக்க
வாழ்க்கைத் துணைநலம் வேண்டும்!
நன்மக்கட் பேறில் தலைநிமிர்வோம்!
அன்புடை மையை மூச்சாக்கி
விருந்தோம்பல் தன்னைப் போற்றிடுவோம்!
இனியவை கூறல் புகழாகும்!
செய்ந்நன்றி அறிதல் இமையாகும்!
நடுவு நிலைமை விழியாகும்!
அடக்கம் உடைமை உயர்வாகும்!
ஒழுக்கம் உடைமை உயிராகும்!
பிறனில் விழையாமை சிறப்பாகும்!
அறத்தில் சிறந்த அறமாகும்!
பொறுமை தானே பொறையுடைமை!
அழுக்கா றாமை சான்றாண்மை!
வெஃகா மையே அறிவுடைமை!
புறம்கூ றாமை நிம்மதிதான்!
பயனில சொல்லாமை நற்பண்பாம்!
தீவினை அச்சம் வீரந்தான்!
ஒப்புர வறிதல் பெருந்தன்மை!
ஈகைப் பண்பே வள்ளன்மை!
அதனால் புகழ்தான் நிலைத்திருக்கும்!
அருளுடைமை உயர்நெறியாம்!
புலாலை மறுத்தல் புனிதந்தான்!
தவமே இல்லறம் மறவாதே!
கூடா ஒழுக்கம் கேடாகும்!
கள்ளாமை தான் ஒளிமயமாம்!
வாய்மைப் பண்பே தூய்மையாம்!
கோபம் தவிர்ப்பதே வெகுளாமை!
இன்னாசெய் யாமை புகழ்ப்பண்பாம்!
கொல்லா மைதான் மனிதந்தான்!
நிலையா மைதான் இவ்வாழ்க்கை!
துறவு ஒழுக்கச் சிகரந்தான்!
மெய்ய்யுணர் தல்தான் மேன்மைதரும்!
ஆசையை ஒழித்தல் அவாஅறுத்தல்!
ஊழ்தான் வாழ்வின் திசைகாட்டி!

மதுரை பாபாராஜ்
[4/18, 8:23 AM] Madurai Babaraj: அருளுடையீர் வணக்கம்

நினைவு கொள்ள வேண்டிய நல் தொகுப்பு
வாழ்த்துகள்
- கு. மோகனராசு

0 Comments:

Post a Comment

<< Home