Friday, April 17, 2020

வீண்!

ஊடகங்கள் எல்லாமே நேரத்தை வீண்டிக்கும்
வாதங்கள் வைத்தே! அவரவர் கட்சிகளின்
தூதர்களாய்  மாறி நடுநிலையே இல்லாமல்
வாதிட்டு நேரத்தை வீண்டிக்கும் கோலங்கள்!
வாதிட்டோர் எந்த முடிவுமின்றிப் போகின்றார்!
ஊடகம் ஏற்கும் நிலையென்ன? சொல்லமாட்டார்!
வாதத்தால்  நேரமெல்லாம் வீண்.

இக்கட்சி அக்கட்சி என்பதை விட்டுவிட்டு
மக்கள் நலத்தில் நடுநிலைப் பார்வையுடன்
எக்கருத்தும் வைக்கவேண்டும் நாள்தோறும் பேசுவோர்!
கட்சிவெறி தாண்டி ஆட்சியாளர் செய்கின்ற
குற்றத்தைத் தூற்றவேண்டும்! சாதனையைப் போற்றவேண்டும்!
இப்படி வாதங்கள் வந்தால் மதிப்புயரும்!
மற்றபடி வாதங்கள் வீண்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home