Friday, April 17, 2020


இயல்பு!

சாணேறிப் போனால் முழஞ்சறுக்கும் வாழ்விலே
கானேகிப் போகலாம் என்றெண்ணும் நேரத்தில்
ஆகா! பலமுழங்கள் முன்னேற்றம் கண்டிருப்போம்!
கானேகும் எண்ணம் தவிடு பொடியாகும்!
வாழ்வு வளையாது நாம்தான் வளையவேண்டும்!
தாழ்வும் உயர்வும் இயல்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home