Friday, April 17, 2020

மறக்கமுடியாதவர்கள்

மறக்கமுடியாத மனிதர்கள்!

என்தந்தை தெய்வத்திரு.முத்துசுப்பு அவர்களிடம் உண்மையாய் இருந்தவர்கள் !

பென்னர் மாணிக்கம்! விசுவாசபுரி் மதுரை!

பென்னர் உணவகத்தில் வேலை! தொழிலாளி!
தந்தையின்மேல் பக்தியுடன் வாழ்ந்தவர்!
தந்தை  இறந்தபின்பும் அன்னார் நினைவுநாளில்
பக்தியுடன் பூமாலை கொண்டுவந்து வைக்கின்ற
பண்பையும் பக்தியையும் கண்டு சிலிர்த்துவிட்டோம்!
தந்தை இருந்தபோதும் பக்தி!  இறந்தபின்பும்
எந்தமாற்றம் இல்லாமல் பக்தியுடன் வாழ்ந்தவர்!
அன்பான மாணிக்கம் ஓசூரில் மைந்தனிடம்
சென்று கழித்தார் இறுதிநாட்கள்! நல்லவர்!
நண்பர் நினைவினைப் போற்று.

மாணிக்கம் மட்டுமல்ல  அன்னார் மகன்களும்
சாலையில் பார்த்தாலும் எங்கள் குடும்பத்தார்
யாரெனினும் தந்த மரியாதை கொஞ்சமல்ல!
வேரோடி நின்றதே பண்பு.

பென்னர் போஜன்! செல்லூர் மதுரை!
என்தந்தை பெயரைத் தன்மகனுக்கு வைத்தார் நன்றியுடன்!

தந்தை பெயரைத் தனது மகனுக்கு
நன்றியுடன் வைத்தே மகிழ்ந்தவர் போஜன்தான்!
தந்தைமுன் உட்கார்ந்து பேசத் தயங்குவார்!
பண்பில் பணிவுக்குச் சான்று.

பென்னரில் வீபெல்ட் பிரிவின் தொழிலாளி!
என்தந்தை சொற்படி கேட்டு நடந்தவர்!
தந்தையின் மேலே அபாரமான பக்திகொண்டார்!
தந்தை இறந்து அடக்கமெல்லாம் செய்துவிட்டு
வந்துவிட்டோம்! அந்த மயானத்தில் அன்றிரவு
தன்னந்தனியாய் உட்கார்ந்து தந்தையார் முற்றிலும்
அங்கே எரியுமட்டும் பார்த்திருந்த போஜானை
என்னென்பேன்? போஜன் மறுநாளில்
என்னிடம்
தந்தையார் எந்தச் சலனமும் இன்றி
அடங்கிவிட்டார்!
என்றேதான் சொன்னார்! எவர்செய்வார் இப்படி?
இன்றும் நினைக்கும் மனம்.

மதுரை பாபாராஜ்

[4/18, 11:15 AM] Saravananddl:

 மாணிக்கம் - சிறு வயதில் அவர் என்ன உறவென்று எமக்குத் தெரியாது. வருடாவருடம் நைனாவின் குடும்பத்தினருக்கு 'பொங்கல்' வாழ்த்து அட்டையைத் தேடி வந்து நேரில் வழங்கிச் செல்வார். ஒரு நாள் பள்ளிக்குச் செல்லும்போது என்னைக் காட்டிலும் இளைய சிறுவன் ஒருவன் வழிமறித்து இரு கைகளையும் கூப்பி வணக்கம் என்று கூறினான். திகைத்து நின்று விட்டேன். பிறகு யார் என வினவியபோது மாணிக்கம் அவர்களின் மகன் எனக் கூறினான். தாத்தாவிற்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினர் அனைவருக்குமே மரியாதை தர வேண்டும் என அவரது குடும்பத்தினருக்குப்  பணித்திருந்தார் என்பது புரிந்தது. அதன் பின்னே பிச்சுமணி (அவரது மகன்) சிறந்த நண்பனானார்.

[4/18, 11:20 AM] Saravananddl:

 போஜன் - தாத்தாவிற்கு முன்னே மிகவும் தயங்கியே அமர்வார். பண்டிகை நாட்களில் இனிப்புகள் கொண்டு தருவார் என்று நினைவு. தாத்தா இறந்த அன்று நிகழ்ந்தது இன்றுதான் கேள்விப்படுகிறேன். தாத்தா எத்தனையோ குடும்பங்களின் விளக்கேற்றினார். ஆனால் நன்றி என்ற வார்த்தைக்கு நம்முடன் வாழ்ந்த திரு.மாணிக்கம் அவர்களும் திரு.போஜன் அவர்களும் சிறந்த எடுத்துக்காட்டு.🙏🙏🙏

0 Comments:

Post a Comment

<< Home