மறக்கமுடியாத மனிதர்கள்!
1954 ல் இருந்து-- 2005முடிய!
மதுரை முதல் சென்னை வேலப்பன் சாவடி முடிய!
எங்களுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்தவர்கள்!
கோமதியம்மாள்!
மோதிலால் சாலை இரண்டில் குடியிருந்தார்!
கோமதி அம்மாள் துரைதான் பெரியமகன்!
தேநீர்க் கடையின் வருமானம் வாழ்வாகும்!
கோமதி அம்மாளோ அம்மாவின் வேலையில்
ஆனமட்டும் ஒத்தாசை செய்தார் அக்காலம்!
காலைப் பொழுதிலே இட்லிக் கடைவணிகம்!
நாளும் பொழுதும் குடும்பத்தார் பேருழைப்பு!
வாழ்வை நகர்த்தினார் அன்று.
பாப்பாத்தி அம்மாள்!
வீட்டுவேலை ஏற்றுப் பணிசெய்வார் நாள்மோறும !
ஆற்றலுடன் தன்வேலை செய்வார் அமைதியாக!
வீட்டில் அம்மாவும் நாங்களும் பேதுவதைக்
கேட்டுப் புன்னகை செய்வார் அதிகமாக!
வீட்டில் வருவதும் போவதும் யாமறியோம்!
ஆற்றல் அமைதி இவர்.
அனந்தம்மாள்!
ஆரப்பாளை யந்தன்னில் நாங்கள் குடியிருந்தோம்!
வேலையில் ஒத்தாசை செய்ய அனந்தம்மாள்
ஆவலுடன் வந்தார் புறக்கடையில. ஓரறையில்
நாள்தோறும் வீட்டிலேயே தங்கித் துணைபுரிந்தார்!
ஆர்வத்தில் இந்தவீட்டில் வாய்ப்பு.
இசக்கியம்மாள்!
மதுரை விசுவா சபுரிவீட்டில் வந்து
அதிர்வலை இன்றிப் பணியில் உதவி
புரிந்துவிட்டுச் செல்கின்ற வல்லமை உண்டு!
அதிர்ந்து பேசாத பண்புகொண்டு வாழ்ந்தார்!
திடீரென்றே சென்னைக்கு நாங்கள் வந்தோம்!
அதுவரை நற்றுணை யானார் இசக்கி!
இவருக்கு நன்றியுடன் வாழ்த்து.
சேனாம்மாள்!
வேலப்பன் சாவடி வீட்டில் உதவியாக
சேனாம்மாள் வந்தார் பணிபுரிய! நல்லவர்
தானுண்டு தன்வேலை உண்டென்று வந்துபோவார்!
பார்த்தோம் அவரை சிலகாலம் முன்னாலே!
வாழ்விலே மாறவில்லை அன்பு.
தங்களது வீட்டில் குடும்பத்தை விட்டுவிட்டு
நம்முடைய வீட்டில் சமைக்கும் பணிதொட்டு
பன்முக வேலைகளில் நாளும் உதவிசெய்யும்
அன்பார்ந்த மாந்தர்கள் நன்றிக் குரியவர்கள்!
என்றும் நினைக்கவேண்டும் நாம்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home