Sunday, April 19, 2020

மறக்க முடியாதவர்!

குடும்ப மருத்துவர் எம்.கிச்லே
சுப்ரமணியபுரம்,மதுரை!

10.02.1911 ---30.04.1972

1948 க்கு முன்னிருந்து 1969 ஆம் ஆண்டு முடிய!

என்தந்தை மதுரைமில் ஆலைப் பணியாளர்!
அந்தத் தொடர்பில் மருத்துவர் நோய்களுக்கு
தந்த சிகிச்சையால் தந்தையின் நண்பரானார்!
பந்தம் தொடர்ந்தது பின்.

மதுரைமில் ஆலை மருந்தகந் தன்னில்
மருத்துவராகத் தொண்டாற்றி பின்னே தனியாய்
மருந்துவக் கூடத்தை வைத்தே வளர்ந்தார்!
கர்வமற்ற பண்பாளர் தான்

குழந்தைப் பருவமுதல் ஆண்டுகள் ஓடி
இளம்பருவம் மட்டும் எனக்கு சிகிச்சை
அளித்தேதான் காப்பாற்றி வாழவைத்தார் கிச்லே!
அவரிடம் சென்றால் குணம்.

இரவுப் பொழுதிலே செல்லும் நிலையில்
வரவேற்று அக்கறையாய்த் தந்தார் சிகிச்சை!
நயமாகப் பேசி குணப்படுத்தும் ஆற்றல்
தளமாக வாழ்ந்தவர் தான்.
.
எங்கள் குடும்ப மருத்துவர்! பாபுஜி
என்றே எனையழைப்பார்! அன்பாகப் பேசுவார்!
பண்பும் மனிதநேயச் சிந்தனையும் கொண்டவர்!
என்றும்  மறவாது நெஞ்சு.

அம்மாவும் அப்பாவும் ரிக்சா, குதிரைவண்டி
என்றே அழைத்துப்போய்க்  காட்டி சிகிச்சைகள்
தந்தே குணமாக்கி வாழ்வில் மகிழ்ந்தனர்!
என்றும் நினைத்திருப்பேன் நான்.

அக்கா கணவருக்கும் மைந்தன் சரவணன்
சிக்கலான நேரத்தில் நல்ல சகிச்சையை
தக்க தருணத்தில் தந்தேதான் காப்பாற்றி
எப்போதும் தக்க அறிவுரை தந்தவர்!
அர்ப்பணிப்பும் கடமையும் வாழ்வு.

வரமுடியா சூழ்நிலை நோயாளிக் கென்றால்
வருவார் மருத்துவர் வீட்டிற்கே! அந்தக்
கருத்தான அக்கறையே  தொண்டின் புகழாம்!
செருக்கற்ற செம்மலை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்







0 Comments:

Post a Comment

<< Home