Thursday, April 23, 2020

            மதிப்பிற்குரிய
என்.வி. பாலகிருஷ்ணன் நாயுடு தாத்தா--தாயாரம்மாள் பாட்டி

சொக்கிகுளம்! மதுரை!

மதுரைமில் என்ற தொழிற்சாலை அன்று
மதுரை நகரில் பழம்புகழ் பெற்றே
எடுப்பாக பல்லா யிரக்கணக்கில் இங்கே
தொழிலாளர் வேலைகள் செய்த ஆலை!
எழிலாக இன்றுமங்கே உண்டு.

 பால கிருஷ்ணன்  முதுநிலை ஊழியர்!
ஆலையில்  நிர்வாக முத்திரைச் சாதனை
ஈட்டிய தாலே புகழுடன் வாழ்ந்திருந்தார்!
மாட்டுவண்டி வைத்து வளமாக வாழ்ந்தவர்கள்!
வீட்டுவாழ்க்கை என்றும் சிறப்பு.

மகன்களோ டீக்காராம் சுப்பையா ஆவர்!
மகள்பெயர் கோவிந்தம் மாள்தான்! குடும்பம்
அகங்குளிர வீட்டு விழாக்களுக் கெல்லாம்
வருவார் அனைவரும் சேர்ந்து.

மகன்கள் குடும்பம் மகளின் குடும்பம்
அருகருகே வாழ்ந்தார்கள்! வாழ்த்தினார் வாழ!
அகத்திலே பேரன்கள் பேத்திகள் ஓட
அகங்குளிர கண்டார் ரசித்து.

பாட்டிதான் தாயாரம் மாளாவார்! எங்கள்மேல்
காட்டிய பாசமும் அன்பும் மறக்க முடியாது!
தாத்தாவைப் பார்த்ததில்லை! பாட்டியைப்  பார்த்துள்ளேன்!
பார்க்க வருவார்! இனிப்புகள் கொண்டுவந்தே
ஆர்வமுடன் தந்தவரை எண்ணுகின்றேன்  இன்றளவும்!
வாழ்த்தினார்  ஆசிகள் தந்து.

மகள்பிறந்தாள் பேரன் மகளையும் பார்த்தார்!
மகன்பிறந்த சேதி தெரிந்தாலும் பார்க்க
உடல்நலம் வாய்ப்பு கொடுக்கவில்லை! அன்று!
கொடுத்துவைக்க வில்லையே நான்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home