Tuesday, May 05, 2020

நாலுவர்ண நஞ்சு!


நாலுபேரை நாடிப் பழகென்பார்! வாழ்க்கையில்
நாலுபேர் என்றும் துணைவேண்டும்!
பேசுவதில்
நாலுவார்த்தை நல்லபேச்சைப் பேசென்பார்!  இத்தகைய
நாலென்றால் நன்றுதான்! அத்தகைய நாலுவர்ணம்
பாலெனினும் நஞ்சே உணர்.

நாலுவர்ண பேதங்கள் சமுதாய வக்கிரங்கள்!
நாலுவர்ணம் வீட்டில் அடித்தால் அழகுதான்!
நாலுவர்ணம் ஓவியம் தீட்டினால் பேரழகு!
நாலு! இடத்தைப் பொறுத்து!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home