Monday, June 08, 2020

பழகப் பழகப் பாலும் புளிக்கும்!

முதல்முறையோ வாங்கவாங்க ரொம்பநாளா காணோம்?
முதல்ல  உட்கார்ந்து காபி குடிங்க!
விடைபெறுவோம்! நீங்க அடிக்கடி வாங்க!
நிறைவுடன் செல்வோம் மகிழ்ந்து.

அதற்கடுத்து போனாலோ வாங்கநீங்க
உள்ளே
மடக்கியுள்ள நாற்காலி காட்டி, எடுங்க
எனச்சொல்லி உட்காரச் சொல்லிவிட்டு காபி??
எனக்கேட்பார்! நாமோ தலையாட்ட வேண்டும்!
மனமின்றி வந்துசேரும் அங்கு.

அடிக்கடி போனால் கதவைத் திறந்து
படியேறி வாங்க எனச்சொல்வார்! நாமும்
படியேறி நாற்காலி தன்னை எடுத்து
இடிவாங்கி உட்கார்வோம்! காபி வராது!
சிறிதுநேரம் ஆகும் கடிகாரம் பார்ப்பார்!
விரைந்தெழுந்து செல்லவேண்டும் நாம்.

பழகப் பழகவே பாலும் புளிக்கும்
பழமொழி சொல்லும்  அறவுரை ஏற்றுப்
பழகினால் நல்லது! எல்லைகள் மீறிப்
பழகினால் தொல்லை உணர்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home