Tuesday, June 09, 2020

குறளைப் பின்பற்று


குறளைப் பின்பற்று

உணவே மருந்தானால் நோயற்ற வாழ்வு!
மருந்தே உணவானால்  நோய்களே வாழ்வு!
திருக்குறள் கூறும் மருந்துக் கருத்தை
கரங்கோர்த்தால் நோய்தவிர்க்கும்  வாழ்வு.

மதுரை பாபாராஜ்

95. மருந்து

குறள் 941:

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.

குறள் 943:
அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

குறள் 944:
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

குறள் 945:
மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு.

குறள் 946:
இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

குறள் 947:
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.

குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

குறள் 950:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து.
-------------------------------------------------------------------




















0 Comments:

Post a Comment

<< Home