Thursday, July 02, 2020

பன்மாயக் கள்வன்

பன்மாயக்கள்வன் படைத்த பாலாவுக்கு வாழ்த்து,!

இமிழ் பனிக்கடல்!

முல்லைப்பாட்டு!

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி,
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை (1-6)
.
மேகம் கடல்நீரை ஏற்று வலப்பக்கம்
மேலெழுந்தே வந்து இடப்பக்கம் மாமலையைக்
கொண்டே விரைந்துசென்று மாமழை பெய்திருந்த
மாலைச் சிறுபொழுதோ மன்னன் பிரிவினைத்
தாங்க முடியாமல் துன்பம் விதைக்கிறதே!
ஏங்கும் அரசியைக் காண்.

பத்துப்பாட் டுக்குள்ளே முல்லைப்பாட் டுத்தலைப்பில்
முத்தாய்ப்பாய் இந்த முதல்பாட்டின் சொற்கட்டில்
கற்கண்டாய் காண்பதே இச்சொற்கள்!
அற்புதமே!
கண்டெடுத்த பாலாவை வாழ்த்து

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home