Tuesday, July 07, 2020

சங்கச் சுரங்கம்!

ஒன்பதாம் உரை!

10.07.20 வெள்ளிக் கிழமை

சேண் நெடும் புரிசை!

திணை: பாடாண்
துறை.   :பரிசில் துறை

பாரி மகளிரை இருங்கோவேளிடம்  கொண்டு சென்ற கபிலர் பாடியது.

இவர் யார்?` என்குவை ஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளித் ,தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,
படுமணி யானைப்,பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே5தந்தை தோழன்: இவர்என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்,
செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை,
உவரா ஈகைத், துவரை ஆண்டு,10நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்!
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின், பாண்கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மா அல்!15யான்தர, இவரைக் கொண்மதி! வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து, அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ! வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்,
கெடல்அருங் குறைய நாடுகிழ வோயே!20

கடையேழு வள்ளலாம் பாரியின் மாண்பைப்
பறைசாற்றும் இந்தப் புறநானூற் றுப்பா
இடையில் வருகின்ற சொற்றொடர் தன்னை
நடைபோட வைக்கின்ற பாலாவை வாழ்த்து!
களைகட்டும் பேச்சரங்கம் தான்.

இவர்களை யாரெனக் கேட்டால் அரசே!
கொடிமுல்லை வாழ்வதற்குத் தேரீந்த பாரி
மகளிர் இவர்கள்! இவர்களின் தந்தை
அகங்கவர்ந்த தோழனே நான்தான்! புலவன்!
நெடிதுயர்ந்த  கோட்டைக்குள் கோலோச்சி வாழ்ந்த
செறிவான  நீண்ட தலைமுறையில் வந்த
மகத்தான வேளே! இருங்கோவே! ஏற்று
மணந்துகொள் என்றார் கபிலர்!
நடக்கவில்லை இந்தக் கனவு.

காரியென்னும் வேந்தன் மகன்கள் இருவரும்
பாரி மகளிர் இருவரையும் ஔவையின்
வேண்டுகோள்  ஏற்று மணமுடித்தார் இல்லறத்தில்!
ஆசி பொழிந்தனர் சூழ்ந்து.

மதுரை பாபாராஜ்

பி்ன்குறிப்பு:
காரி என்னும் அரசனின் மகன்கள் சோழிய ஏனாதித் திருக்கண்ணன், தேர்வன் மலையன் என்னும் அண்ணன் தம்பிகள், அங்கவை சங்கவை இருவரையும் மணந்தனர்.

0 Comments:

Post a Comment

<< Home