Friday, July 24, 2020

இலக்கியக்காட்சி

முத்தொள்ளாயிரம்
சோழன் | கிள்ளி
பாடல் 32

நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற – யாமத்
திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் நெஞ்சு. – 32

கவிதை:
கிள்ளியின் தோள்களைக் காண்பதற்குக் கண்களோ
கிள்ளித் துடிக்கவைக்க நாணமோ பின்னிழுக்க
கொள்ளை அழகனை வேட்கையோ பாரென்று
தள்ளுதே முன்னரே! வேந்தனுலா சென்றுவிட்டான்!
உள்ளம் இரவெல்லாம் பார்த்திருக்க லாமென்றே
சொல்லியது! நாணமோ பார்க்காமல் வந்ததே
நல்லதென்று கூறிட  போராட்டம் ஓய்ந்தேதான்
மெல்லியலாள் தூங்கினேன் சோர்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home