Tuesday, July 14, 2020

மதுரை நினைவு

சேர்ந்துவாழ்ந்த சுற்றங்கள் எங்கே?

சேர்ந்திருத்து வாழ்ந்த உறவுகளின் கூட்டமெல்லாம்
யார்யாரோ எங்கேயோ என்றே பிரிந்துவிட்டோம்!
சேர்ந்துவாழும் வாய்ப்புகள் மீண்டும் கிடைக்குமா?
வாழ்வியல் கூறும் நடைமுறைகள் இப்படிக்
கூறவில்லை! ஏற்கவேண்டும் நாம்.

பழைய நினைவுகள் வந்துவந்து மோத
இழையோடும் ஏக்கம் அசைபோட்டுப் பார்க்க
மலைத்தேன் கடந்துவந்த பாதைகளைப் பார்த்து!
அலையலையாய் எண்ணங்கள் தூது.

இன்றிங்கே நாளையெங்கே? பன்னாடு காணொளி
கண்டே உரையாடும் கோலங்கள்! சுற்றங்கள்
அன்னியமாய் வாழும் தலைமுறைகள் காணுகிறோம்!
வந்தது வந்ததுதான்! சென்றது சென்றதுதான்!
உன்வாழ்க்கை உன்னோடு தான்.

மதுரை பாபாராஜ்

எப்போதும் சுற்றம் உங்களோடு
எப்போதும் சுற்றும் உங்களோடு..

பொற்கைப் பாண்டியன்

0 Comments:

Post a Comment

<< Home