Friday, July 10, 2020

பாலாவின் சங்கச் சுரங்கம்!

ஆய்வாளர் பாலாவுக்கு வாழ்த்து.

10.07.20

தலைப்பு சேண் நெடும் புரிசை.

நட்புடன் சுந்தர் அறிமுகம் செய்துவைக்க
அற்புத மான நிகழ்வின் தொடக்கமே
நற்றமிழ் வானில் இலக்கியப் புள்ளினங்கள்
சுற்றினத் தேடித்தான் வந்து.

சங்கச் சுரங்க வளாகத்தில் ஆர்வமுடன்
எங்களைத் தென்றல் நடையால் உலவவைக்கும்
பன்முக ஆற்றலை வாழ்த்தி வணங்குகிறேன்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

செம்மையெனும் சொல்லுக்குப் பாலா விளக்கத்தைச்
சொன்னதும் செம்மைக்கா இத்தனை அர்த்தமென்று
உள்ளம் வியக்கப் புரிந்துகொண்டேன்
நன்றாக!
வெள்ளிக் கிழமையின் முத்து.

பொறியியல் பட்டம் பெறாத குருவி
பொறியியலை விஞ்சுகின்ற கூடுகளைக் கட்டும்
அறிவியல் நுட்பத்தைக் கற்றதெங்கே என்று
மகிழ்ந்தே தெரிவித்தார் பார்த்து.

உயரமான யானை அதன்மேலே வீரன்
உயர்த்திக் கொடிபிடித்தே விண்முட்டும் அந்த
உயரமான வாசலுக்குள் செல்லும் நிலையை
அழகாகச் சொன்னார் வியந்து.

உயர அளவைக்  கணக்கியல் மூலம்
தரமாய் அளக்கின்ற சூட்சுமத்தைத்
தந்தார்!
விளக்கிய பாலா அறிவியல் நுட்பம்
மலைத்திட வைத்ததே பார்.

அரண்மனை வாயில் அமைப்பில் உள்ள
பொருள்களின் பட்டியல் வியப்பினைத் தூவ
சுரங்கத்தை அந்த அரங்கத்தில் காட்டிப்
பெருமைக்கு வித்திட்டார் செப்பு.

மதுரை பாபாராஜ்






0 Comments:

Post a Comment

<< Home