அமுதா பிறந்தநாள்
மகள் அமுதா ரகு பிறந்தநாள் வாழ்த்து!
18.09.20
ஆசிரியர் நற்பணியில் மாணவிகள் மாணவரை
மேதினியில் இந்தியராய் வாழ்வில் நடைபோடப்
பாடுபடும் காரை அமுதா அகங்குளிர
நீடுவாழ்க பல்லாண்டு தான்.
அன்புக் கணவன் ரகுவுடன் பொன்மகள் நான்சியும்
என்றும் உடனிருக்க பெற்றோரின் ஆசியுடன்
இன்பமுடன் பல்வளங்கள் சூழ்ந்திருக்க வாழியவே!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home