முத்தொள்ளாயிரக் காட்சி 33
இலக்கியக் காட்சி
முத்தொள்ளாயிரம் 33 சோழன்
கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம்
தண்டப் படுவ தடமென்தோள்-- கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு
எலாஅ முறை கிடந்த வாறு.
மன்னவன் தன்னை என்றன்
மலர்விழி கண்ட துண்மை!
அன்பினைச் சிந்தும் உள்ளம்
அரசனை யணைத்த துண்மை!
என்னெழில் தோளி ரண்டும்
ஏந்தலைத் தழுவிக் கொண்டே
இன்புறும் நிலையில் என்றும்
இருந்ததே இல்லை! தோழி!
கண்டன கண்கள்! ஓடிக்
கலந்ததே உள்ளம்! ஆனால்
தண்டனை தனிலி இருந்து
தப்பின இவையி ரண்டும்!
பெண்மணித் தோளி ரண்டும்
பொலிவிழந் தனவே தோழி!
தண்டனை தன்னை மன்னன்
தளிர்த்தோள் களுக்கே தந்தான்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home