அன்றும் இன்றும்
அன்றும் இன்றும்!
அன்று
அம்மாவும் அப்பாவும் பார்த்திருக்க பிள்ளைகள்
அங்கங்கே உட்கார்ந்து பேசி மகிழ்ந்திருப்போம்!
அன்றைய சூழல் தினந்தோறும் இப்படித்தான்!
நிம்மதியாய்த் தூங்குவோம் சேர்ந்து.
இன்று
அம்மாவும் அப்பாவும் கூடத்தில்! பிள்ளைகள்
அங்கே அறையில் தனித்தனியாய்த் தங்குகின்றார்!
தங்கள் இணைய தளங்களில் மெய்மறப்பார்!
கொஞ்சநேரம் பேசிவிட்டு மீண்டும் மூழ்கிடுவார்!
துஞ்சுகின்ற நேரமெல்லாம் மாறிவிட்ட காட்சிகள்!
இன்றைய கோலம் இது.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home