Wednesday, November 04, 2020

மதுரை நினைவுகள்

 மதுரை நினைவுகள்!


மோதிலால் முதன்மைச் சாலை!

MOTHILAL MAIN ROAD!


1960 களில் 


திரு.


கணபதி சிகைதிருத்த நிலையம்.2


மடித்தணிந்த  வேட்டி!  அரைக்கை பனியன்!

நெடிதுயர்ந்த மேனி! சிரித்துப் பழகும்

பரபரப்புப் பேச்சு! கடமையே மூச்சு!

சரசர வென்று முடிதிருத்தும் வேகம்!

அழகான நாற்காலி ! ராஜாபோல் நாங்கள்

அமர்ந்திருக்க அண்ணன் முடிதிருத்தும் வேகம்

அமர்க்கள மாயிருக்கும் பார்ப்பதற்கு அங்கே!

முடித்ததும் நாலணா தந்தே பறப்போம்!

ஒருமாத காலம்  விடுதலை பெற்றே

வருவோம் கடையில் இருந்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home