இந்திய விடுதலைக்கு அகவை 74/75
இந்தியாவைக் காத்திடுவோம்!
இந்திய விடுதலைக்கு அகவை 74/75
15.08.1947--15.08.1921
எழுபத்து நான்கு நிறைவடைந்தே
எழுபத்து ஐந்தினைக் காண்கின்றோம்!
எழுச்சி நடையில் கம்பீரம்
மிளிர நிமிர்ந்தது இந்தியா!
இந்திய நாட்டைச் சீர்குலைப் பதற்கு
எப்படிச் சீண்டிப் பார்த்தாலும்
இந்திய ரெல்லாம் ஒன்றாய் நின்றே
இமயம் போலத் திரண்டெழுவோம் !
அந்நிய நாட்டின் துரோகச் செயல்கள்
அனைத்தையும் இங்கே முறித்திடுவோம்!
இந்தியா வாழ்க இந்தியா வாழ்க
என்றே நிமிர்ந்து முழங்கிடுவோம்!
எரிமலை பாரதி அனல்வரிக் கவிதை
ஊட்டும் உணர்ச்சியை ஏந்திடுவோம்!
வரிப்புலிப் பகையோ பாய்ந்தே வரினும்
வாலைச் சுருட்ட வைத்திடுவோம்!
எந்தப் பக்கம் வந்தாலும்
எத்தனை வியூகம் வகுத்தாலும்
இந்தியன் என்ற உணர்வுடனே
இந்திய நாட்டைக் காத்திடுவோம்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home