நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
வணக்கத்தைக் கூறும் பறவையே!
இன்றைய கவிதையைக் கேள்.
ஓசை! ஓசை! ஓசை!
உளியோசை சிலையெழில் கூறும்! துள்ளும்
அலையோசை கடலெழில் கூறும்! அருமை
மணியோசை மங்கலம் கூறும்! மலையின்
நீரோசை அருவியெனக் கூறும்! மரத்தின்
இலையோசை தென்றலைக் கூறும்! செவியில்
இசையோசை இன்பத்தைக் கூறும்! வருடும்
சலங்கை ஓசை ஆடலைக் கூறும்! மருத
வயலோசை வளத்தையே கூறும்! கவரும்
பறவைக் குரலோசை மகிழ்ச்சியைக் கூறும்!
மழலை! குழலையும் யாழையும் விஞ்சும்!
உலகை மறப்போம் உணர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home