அன்புநாதன்
அன்புநாதன்!
கவிதைக் கதை!
சொந்தக் குழந்தையைக் கொஞ்சிட நேரமின்றி
அன்புநாதன் மேலாளர் வீட்டுக்குச் சென்றவுடன்
அந்தமே லாளர் தனது குழந்தையை
கொஞ்சதூரம் பள்ளியில் விட்டுவிட்டு
வாங்கவென்றார்!
அன்புநாதன் கொஞ்சிக் குலவி குழந்தையைப்
பள்ளியிலே விட்டார் விரைந்து.
சொந்தக் குழந்தையைக் கொஞ்சவில்லை அன்புநாதன்!
எந்தக் குழந்தையோ அந்தக் குழந்தையைக்
கொஞ்சியே கெஞ்சினார்! அப்போது சிந்தனையில்
தன்குழந்தை வந்துவந்து போனதை எண்ணுகின்றார்!
தன்குழந்தை ஏங்கியது ஏங்கியதே!
வேதனை
நெஞ்சமுடன் சென்றார் தளர்ந்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home