.5.அஞ்சலை அம்மாள்
5. அஞ்சலை அம்மாள்
விடுதலைப் போரின் முதல்பெண்போ ராளி!
கணவருடன் பங்கெடு்த்தார்! அஞ்சலையின் வீரம்
மணக்கின்ற வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தால்
மனமே சிலிர்க்கிறது இங்கு.
இந்தியர்மேல் வன்கொடுமை ஏவினான் கர்னல்நீல்!
சென்னையில் வைத்த அவன்சிலையை நீக்கவே
தன்மகளாம் ஒன்பது வயதான லீலாவும்
பங்கெடுக்கப் போராடி நின்றார்! சிறைசென்றார்!
தன்மகளோ நான்காண்டு காலம் சிறைக்கொடுமை
புன்னகைத்தே ஏற்றார்! மகாத்மா மகிழ்ந்தேதான்
அன்புடன் வார்தாவில் தொண்டாற்ற
சேர்த்தாராம்!
பண்பாளர் வாழ்கவே நீடு.
மகப்பேறு பார்க்க சிறைவிட்டே வந்து குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறைக்குள்
அடைபட்டார்! அக்கொடுமை ஏற்று
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home