Saturday, October 23, 2021

நாலடியார் 158

 

நாலடியார் 158


பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து

ஏதிலா ரிற்கண், குருடனாய்த் தீய

புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும்

அறங்கூற வேண்டா அவற்கு.  

(நாலடி 158)


Realizing the greatness of vitue,

Be deaf to hear the secrets of others,

Be blind to seeing the women of others;

Be dumb to speaking behind the back of others;

No need for books of morals to guide you.

[Translator: M. Annamalai – modified]



கவிதை:


ஒழுக்கத்தின் நற்புகழை நன்குணர்ந்து, மாற்றார்

இரகசியத்தைக் கேட்காமல் வாழ்ந்தும், நெறியில்

பிறரின் மனைவியை நோக்காமல்,

வாழ்ந்தும் 

பிறரைக் குறித்துப் புறணிபே சாமல்

இருப்பவரை இங்கே ஒழுக்கத்தைக் காட்டி

விளக்கிட நூல்வேண்டாம் சொல்.


மதுரை பாபாராஜ்


Meaning conveyed Ashraff?

0 Comments:

Post a Comment

<< Home