Tuesday, November 02, 2021

குடும்ப நண்பர் திருமதி காந்தி ஆறுமுகம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


குடும்ப நண்பர் திருமதி காந்தி ஆறுமுகம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

நாள் 02.11.2021

வேலப்பன் சாவடியில் கேந்ரியவி காரிலே

நாங்கள் குடிவந்தோம்! மாடியில் ஆறுமுகம்

பாங்குடன் வாழ்ந்துவந்தார்! இல்லத் தரசியாம்

காந்தி வெகுநாள் பழக்கம்போல் வந்தேதான்

தானாக நண்பரானார் பார்.


பழகப் பழக குடும்பத்தின் நண்பர்

நிலைக்குவந்தார்! எல்லா நிகழ்விலும்  வந்தே

கலந்துகொண்டு பேருதவி செய்தார்! எங்கள்

குடும்பத்தில் ஒன்றி ஒருவராக மாறிப்

பழகுகின்றார் வாழிய நீடு.


கணவர் குழந்தைகள் நண்பர்கள் சுற்றம்

தினமும் மகிழ்ந்திருக்க வாழ்கபல் லாண்டு!

மனங்குளிர வாழ்வாங்கு வாழ்கபல் லாண்டு!

அனைவரும் வாழ்த்துகின்றோம் சூழ்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்



 

0 Comments:

Post a Comment

<< Home