ஏன்? ஏன்? ஏன்?
ஏன்? ஏன்? ஏன்?
திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று
கருத்துடன் பேணி வளர்த்தால் முதுமை
திருப்புமுனை வாழ்வாகும் என்றே
நினைத்தேன்!
நெருப்புமுனை வாழ்வாச்சே ஏன்?
படித்தார் வளர்ந்தார் பணிக்களம் சென்றார்!
படிப்படி யாகவே இல்லறம் ஏற்றார்!
மதிவழி வாழ்க்கை மழலையர் என்றே
நதிபோல் நடந்தார் இணைந்து.
நானோ முதுமைப் பருவத்தில் வாழ்கின்றேன்!
ஏனோ தெரியவில்லை? இப்படியோர் வாழ்வினைக்
காண்பேன் எனநான் நினைக்கவில்லை? காணுகின்றேன்!
ஏனென்று யாருரைப்பார் சொல்?
இளமை வரைக்கும் இனிமைதான் வாழ்க்கை!
இடைப்பட்ட வாழ்க்கை உளைச்சலில் வாழ்ந்தேன்!
இடைவெளியில் மூச்சுவிட்டேன்! எந்தன் முதுமைப்
பருவம் எரிமலைதான் ஏன்?
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home