கதறுகின்றோம்
நித்தம் நித்தம் அழுகின்றோம்
நிம்மதி இன்றித் தவிக்கின்றோம்
கிழக்கில் சென்றால் எரிமலைகள்
மேற்கில் சென்றால் நிலநடுக்கம்
தெற்கில் சென்றால் பெருவெள்ளம்
வடக்கில் சென்றால் பாதாளம்
இப்படித் திசைகள் எல்லாமே
அச்சம் நடுக்கம் தருமென்றால்
எங்கே நாங்கள் செல்வதுவோ
எப்படி நாங்கள் வாழ்வதுவோ
குடிசை கட்டி வாழ்ந்திருந்தோம்
குகுகுபு தீயோ பற்றியது
ஓடிப் புகுந்தோம் மாடிவீட்டில்
அய்யோ! இடிந்து விழுந்ததுவே
தெருவோ ரத்தில் குடிபுகுந்தோம்
திருடர் தட்டிப் பறித்தனரே
ஊரை விட்டே ஊர்சென்றோம்
ஊரார் மிரட்டி விரட்டினரே!
இந்த நிலையில் வாழ்கின்றோம்
நொந்து போய்தான் வாழ்கின்றோம்
கண்ணீர் வழிய வாழ்கின்றோம்
கதறிக் கதறி வாழ்கின்றோம்
மதுரை பாபாராஜ்
03.01.22
0 Comments:
Post a Comment
<< Home