நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
நண்பர் IG சேகர் அனுப்பிய படம்.
வணக்கத்தைக் கூறும் பறவையே! கொஞ்சம்
இணக்கமுடன் என்கவிதை கேள்!
கொரோனா மாறிமீறி் வருகிறதே!
கண்களுக்கே இங்கே புலப்படாத
வண்ணமுள்ள
நுண்கிருமி தாக்காமல் காப்பதற்கு நாமிங்கே
என்னென்ன செய்தாலும் நாளும் உருமாறி
வந்திங்கே தாக்குவ தேன்?
முகக்கவசம் கைச்சுத்தம் என்றேதான் சுத்தம்
வகைவகையாய்ப் பின்பற்றி வாழ்ந்தாலும் தாக்கும்
வகைதொகை தன்னைத் தெரிந்தே வந்து
படையெடுக்கக் கண்டேன் வியந்து.
வாழ்க்கை முறையே தலைகீழாய் மாறியதே!
வாழ்வில் அலுவலகம் பள்ளிகள் எல்லாமே
வீட்டின் சுவர்களுக்குள் மாறி நடக்கிறதே!
ஏற்றேதான் வாழ்வோம் பொறுத்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home