Tuesday, March 01, 2022

காயத்ரி பிரபா சமையல்


சேனைக்கிழங்கு பொரியல்!


அம்மா வசந்தா சொல்ல காயத்ரி சமைத்தார்!


தேவையான பொருட்கள்


சேனைக்கிழங்கு

சின்ன வெங்காயம் 

வெள்ளைப் பூண்டு

மஞ்சள்தூள்

சாம்பார்பொடி

கரம்மசாலா

கருவேப்பிலை

கடுகு உளுத்தம்பருப்பு

உப்பு

எண்ணெய்

-------------------------------------------------------------

சேனைக் கிழங்கைச் சதுரமாக வெட்டியே

வேகவைத்து நீரை வடிகட்டி மீண்டுமந்த

சேனைக் கிழங்கை பொரிக்கவேண்டும்! வெங்காயம் பூண்டையும் 

சேர்த்தேதான் ஒன்றிரண்டாய்த் தட்டவும்!

வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகையும்

சேர்த்து உளுத்தம் பருப்பு கருவேப்பி(லை)

போட்டேதான் சாம்பார் பொடியும் கரம்மசாலா

சேர்த்தே வறுத்தே எடுத்ததும் பாத்திரத்தில்

போட்டுவைத்தால் உண்டு் ருசிப்பதற்கு நாகேட்கும்!

காயத்ரி, அம்மா உரைத்ததுபோல் செய்தாராம்!

காயத்ரி வாழ்க சமைத்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home