Wednesday, March 02, 2022

வல்லரசா? வல்லூறா?

 வல்லரசா? வல்லூறா?


போர்தொடுக்கக் காரணங்கள் ஆயிரம் கூறலாம்!

போரைத் தவிர்த்தேதான் அப்பாவி மக்களைக் 

காப்பதற்கோ காரணமே இல்லையா?

உள்ளத்தில்

ஈரமும் இல்லை! கருணையும் இல்லையா?

போர்தொடுத்த நாடிங்கே வல்லரசா? வல்லூறா?

பாரிலுள்ள நாடுகளே! போரை நிறுத்துங்கள்!

ஊடகத்தில் போர்க்காட்சி நெஞ்சைப் பிழிகிறது!

நாடுகளே! போர்தவிர்க்கக் கூடு.


மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home