இசைமேதை குன்னக்குடி வைத்தியநாதன்
இசைமேதை குன்னக்குடி வைத்தியநாதன் புகழ் வாழ்க!
அகவைத்திருநாள்: 02.03.22
நெற்றி முழுவதும் வெள்ளைத் திருநீரால்
பட்டை அடித்தே நடுவிலே குங்குமம்
வட்ட வடிவத்தில் வைத்திருப்பார்! புன்னகையோ
எப்போதும் வைத்திய நாதர் முகத்திலே!
அப்பப்பா! என்ன அழகு.
வயலின் குழந்தையை நெஞ்சிலே தாங்கி
இசையினை மீட்டுகின்ற ஆற்றலைக் கண்டே
வியந்து வாழ்த்தாத உள்ளமே இல்லை!
புகழ்வாழ்க இவ்வுலகில் தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home