இப்படியும் மனிதர்கள்
இப்படியும் மனிதர்கள்!
வாழ்க்கை கிடைத்திருந்தும் வாழ மனமற்றோர்!
வாழ்க்கை கிடைக்காமல் வாழத் துடிப்பவர்கள்!
சூழ்நிலைக் கைதிகளாய் மாறி முணுமுணுப்போர்!
வாழ்வின் விளிம்பிலே நின்றும் மகிழ்ந்திருப்போர்!
வாழ்ந்தாலும் மற்றவரைப் பார்த்துக் குமுறுவோர்!
தாழ்ந்தாலும் உள்ளம் திருப்தியுடன் வாழ்பவர்கள்!
வாழ்விலே இப்படித்தான் இங்கே மனிதர்கள்!
வாழ்விலே நம்மினத்தைப் பார்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home